பல்வேறு அரசியல் கட்சிகள் குறித்தும், அவர்களது நடவடிக்கைகள் குறித்தும், Youtube-ல் பேசி வருபவர் சவுக்கு சங்கர். குறிப்பாக, ஆளுங்கட்சி குறித்து அதிக அளவில் விமர்சனங்களை முன்வைக்கும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று சவுக்கு சங்கரின் வீட்டில், 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், கழிவுநீரை வீட்டின் உள்ளே கொட்டிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு, எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்த சம்பவம், அராஜகத்தின் உச்சம்” என்றும், “ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், இதனை சகித்துக் கொள்ள மாட்டார்கள்” என்றும் கூறியுள்ளார்.
மேலும், “இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை, சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார். “நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அதிமுக பதவியேற்றவுடன், இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது, கடுமையான எடுக்கப்படும்” என்றும், எச்சரிக்கை விடுத்துள்ளார்.