Connect with us

Raj News Tamil

பசும்பொன்னில் விரட்டப்பட்ட எடப்பாடி தரப்பினர்..!

அரசியல்

பசும்பொன்னில் விரட்டப்பட்ட எடப்பாடி தரப்பினர்..!

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர், எதிர்கட்சியினர் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் அஞ்சலி செலுத்த வந்தபோது ,அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி வாழ்க,அண்ணன் உதயகுமார் வாழ்க என கோஷமிட்டனர்.

அப்போது அங்கிருந்த மற்றொரு தரப்பினர் யார் அது எடப்பாடி பழனிசாமி வாழ்க என முழக்கமிட்டது. இது ஒன்றும் அரசியல் களம் அல்ல,கோவில் வந்தோமா சாமி கும்பிட்டோமா சென்றோமா..? அத விட்டுபுட்டு முழக்கம் எல்லாம் போடக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கோபமடைந்த ஆர்பி உதயகுமாரை அங்கிருந்த சிலர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் வராததால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் இருப்பதாக செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in அரசியல்

To Top