மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜ்பவனில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது.
புதிய ஆட்சி அமையும் வரை இடைக்கால முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியில் நீடிக்கக் கேட்டுக் கொண்டார். இந்த நடவடிக்கைகளாள் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.