பாக்கெட்டில் இருந்த செல்போன்.. திடீரென பற்றிய நெருப்பு.. பதறிய முதியவர்.. கவனம் மக்களே..

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள மரோட்டிச்சல் பகுதியை சேர்ந்தவர் எலியாஸ். 70 வயதாகும் இவர், தேநீர் கடையில் அமர்ந்துக் கொண்டு, தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக, அவர் பாக்கெட்டில் இருந்த செல்போன், தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது செல்போனை தூக்கி வீசி முயல்கிறார். ஆனால், செல்போனில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அதனை எடுத்து போட முடியாமல் தவித்தார். இறுதியில், வலியை பொறுத்துக் கொண்டு, தனது செல்போனை பாக்கெட்டில் இருந்து தூக்கி வீசினார்.

இருப்பினும், அவரது சட்டையில், தீ எரிந்துக் கொண்டு தான் இருந்தது. இதையடுத்து, எலியாஸின் சத்தம் கேட்டு வந்த இன்னொரு நபர், அவரது சட்டையில் இருந்த நெருப்பை அனைப்பதற்கு உதவி செய்தார்.

பார்ப்பதற்கே நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ள இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், செல்போனை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பலர் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த பரபரப்பு வீடியோவுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-

https://www.indiatoday.in/?jwsource=cl

RELATED ARTICLES

Recent News