தலைநகர் டெல்லியில், வரும் 5-ஆம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. 70 சட்டமன்ற தொகுதிகளுக்கான இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி என்று, மும்முனை போட்டி நடைபெற்று வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பாஸ், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதியுதவி, தலித் மாணவர்களுக்கு உதவித் தொகை என்று பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை, அனைத்து கட்சியினரும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த தேர்தலுக்கான பிரச்சாரம், தற்போது முடிவடைந்துள்ளது.
அனல் பறக்க நடக்க இந்த விவாதம்,தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆம் ஆத்மி 3-வது முறையாக தொடர்ச்சியாக ஆட்சி அமைக்குமா?, காங்கிரஸ் அல்லது பாஜக வெற்றியை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதேபோல், ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் வரும் 5-ஆம் தேதி அன்று, தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம், தற்போது முடிவடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.