7 கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. இந்த கருத்துக்கணிப்பை பலரும் கருத்து திணிப்பு என விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “தேர்தல் முடிந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்கு பிறகு கருத்து திணிப்பு என்பது நடந்திருக்கிறது. இந்த கருத்து திணிப்பு சரி என்று சொன்னால் 2004 ஆம் ஆண்டு இதே மாதிரியான ஒரு கருத்து கணிப்பு வந்தது..
அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார் அந்த கருத்துக்கணிப்பில் பாஜக தான் மீண்டும் வெல்லும் என்றும் வாஜ்பாய் தான் மீண்டும் பிரதமர் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
அந்த கருத்துக்கணிப்புகள் எப்படி முற்றிலும் பொய்யானதோ இதேபோல இந்த கருத்துக் கணிப்புகளும் பொய்யாகி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.நாளை வரை பொறுமையாக இருங்கள் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றும்
மோடி பல வேஷங்களை போட்டுள்ளார் ஹிந்து முஸ்லிம் வேஷம் போட்டார். ராமர் குழந்தையை குடிசையில் இருந்து கோபுரத்திற்கு கொண்டு வந்தோம் என்றார். அவரே கடவுள் என்றார். கடைசியாக எல்லாம் தோற்றுப் போன நிலையில் தியானம் பண்ண வந்துவிட்டார்.
பல வேஷம் போட்டு விட்டார். கடைசி வேஷம் கருத்துக்கணிப்பு மூலம் ஒரு திணிப்பை ஏற்படுத்தி இந்திய கூட்டணியில் இருக்கக்கூடிய முகவர்களை சோர்ந்து போய்விட வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை செய்திருக்கிறார்கள்.