மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் NDA கூட்டணி 288 இடங்களிலும், இந்தியா கூட்டணி 231 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி வாய்ப்புகளைத் தக்க வைத்துக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பிஜேபி பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க வேண்டும் இல்லையெனில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்படும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலை 11.15 மணியளவில் மும்பை பங்குச்சந்தை தடாலடியாக சரிந்தது. யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சென்செக்ஸ் 4100 புள்ளிகள் வரையில் சரிந்து இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் ரூ.26 லட்சம் கோடி வரையிலான இழப்பைச் சந்தித்தனர்.
இந்த வீழ்ச்சியால் அனைத்து துறை பங்குகளும் பாதிக்கப்பட்டன. ஐடி, நிதி, உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் பங்குகள் பெரும்பாலும் அதிக பாதிப்பைச் சந்தித்து வருகிறது.