மேகாலயா மாநிலத்தை சேர்ந்த பின்சுக்லாங் (38) என்பவர் வீட்டில் கடந்த திங்கள் கிழமை பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது பின்சுக்லாங் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது மின்சார மெத்தை வெடித்து அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தேவைக்கு அதிகமாக மின்சார மெத்தை சார்ஜ் செய்யப்பட்டதால் இந்த விபத்து நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்சுக்லாங் கடந்த மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாததால் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது விசாரணை முடிந்த பிறகுதான் தெரியவரும்.