என்ன ஒரு புத்திசாலித்தனம்..! ஓலாவில் ஸ்பீக்கராக மாற்றிய மக்கள்..!

இந்தியா முழுவதும் நேற்று நவராத்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில், நவராத்திரி விழா கொண்டாட்டத்தின் போது, பொதுமக்கள் நடனமாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஸ்பீக்கராக மாற்றி, பாட்டு போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் செல்போன் வெளிச்சத்தில் ஓலா பைக்கை சுற்றி வந்து நடனமாடி நவராத்திரி விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.