கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா பகுதியில் இருந்து 100 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன.

அந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகள், விளைநிலங்களுக்கு வருகின்றன. இதனால் விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வயல்வெளிகளை சுற்றிலும் அனுமதியின்றி மின் வேலி அமைத்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த மின் வேலிகளில் சிக்கி, யானைகள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
கடந்த வாரம் மூன்று யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிந்தன. இதனை தொடர்ந்து ஒற்றை ஆண் யானை நடந்து சென்ற போது தாழ்வான மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி அந்த ஆண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
தருமபுரி அருகே ஆண் யானை நடந்து சென்ற போது தாழ்வான மின்கம்பியில் உரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.#Dharmapuri | #ElectricShock | #Elephant | #ElectricWire pic.twitter.com/1hfs4EUnth
— Raj News Tamil (@rajnewstamil) March 18, 2023