“நீ Product தான்.. Customer கிடையாது” – வாட்ஸ்-அப் நிறுவனம் மீது பகீர் குற்றச்சாட்டு.. அதிர்ச்சியில் ஆழ்த்திய எலன் மஸ்க்..

வாட்ஸ்-அப் என்ற செயலியின் மூலமாக, எத்தனை மெசேஜ்களை வேண்டுமானாலும் இலவசமாக அனுப்பிக் கொள்ள முடியும். மேலும், வீடியோ கால், வாய்ஸ் கால் என்று எதை வேண்டுமானாலும், இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இவ்வாறு பல்வேறு வசதிகள் இருந்தபோதிலும், இந்த செயலியில் விளம்பரங்கள் எதுவும் வெளியிடப்படுவதில்லை. இருப்பினும், இந்த நிறுவனம் எப்படி வருமானம் ஈட்டுகிறது என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு குழப்பம் இருந்து வருகிறது.

இவ்வாறு இருக்க, எக்ஸ் தள பயனாளர் ஒருவர், தன்னுடைய கணக்கில் இருந்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், வாட்ஸ்-அப் நிறுவனம் அதன் பயனாளர்களின் டேட்டாவை, ஒவ்வொரு நாள் இரவும் ஏற்றுமதி செய்கிறது. இந்த டேட்டாக்கள் ஆராயப்பட்டு, பின்னர் சரியான வாடிக்கையாளருக்கு சரியான விளம்பரங்கள் தோன்ற பயன்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளரை Product-ஆக உருவாக்குகிறார்கள்.. கஸ்டமராக அல்ல..” என்று கூறியிருந்தார்.

இதற்கு திரும்பி பதில் அளித்த எலன் மஸ்க், “வாட்ஸ்-அப் நிறுவனம், ஒவ்வொரு நாள் இரவும், உங்களது டேட்டாக்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால், சிலபேர், இன்னும் இது ஒரு பாதுகாப்பான செயலி என்று நம்புகிறார்கள்” என கூறியிருந்தார்.

இவரது இந்த குற்றச்சாட்டு, மெட்டா நிறுவனமோ? வாட்ஸ் அப் நிறுவனமோ? எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், கம்ப்யூட்டர் புரோகிராமரும், வீடியோ கேம் டெவலப்பருமான ஜான் கார்மக், எலன் மஸ்கிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

அதில், நாம் அனுப்பும் மெசேஜ்கள் ஸ்கேன் செய்யப்படுவதற்கும், ஏற்றுமதி செய்யப்படுவதற்கும் ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்று கூறியுள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ், நியுராலிங்க், டெஸ்லா ஆகிய நிறுவனங்களை நடத்தி வரும் எலன் மஸ்க், தற்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் சில தருணங்களில், மெட்டா நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தின்போது, “மெட்டா ஒரு பேராசை மிகுந்த நிறுவனம்” என்று விமர்சித்திருந்தார்.

RELATED ARTICLES

Recent News