பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எம்புரான். லூசிபர் படத்தின் 2-ஆம் பாகமான இந்த திரைப்படம், கடந்த 27-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை தொடர்ச்சியாக பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும், 4 நாட்களில் 175 கோடி ரூபாயை, இந்த திரைப்படம் வசூலித்துள்ளது.