கேரள மாநிலம் திருவணந்தபுரம் பகுதியை சேர்ந்த பெண் நிமிஷா பிரியா. இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு, ஜூலை மாதம், ஏமன் நாட்டில் செவிலியராக பணியாற்றி வந்தார். அப்போது, தலால் அப்தோ மஹ்தி என்ற நபரை, கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில், இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை ரத்த செய்ய வேண்டும் என்று, அவரது தாயார் பிரேமா குமாரி கடுமையாக போராடியுள்ளார்.
இதற்கு எதிராக பல்வேறு சட்ட போராட்டங்களை பிரேமா குமாரி செய்துள்ளார். இவ்வாறு இருக்க, ஏமன் நாட்டு உச்சநீதிமன்றம், நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனையை நிறுத்துவதற்கு, கடைசியாக ஒருவழியை கூறி இருந்தது.
அது என்னவென்றால், தலால் அப்தோ மஹ்தி-யின் குடும்பத்தினருக்கு பணத்தை கொடுத்து, அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள் என்று அறிவுறுத்தியிருந்தது. ( இவ்வாறு பணத்தை கொடுத்து சமாதானம் செய்ய முயற்சி செய்வது Blood Money என்று அழைக்கப்படுகிறது )
இதன் விளைவாக, அந்த குடும்பத்தினரிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு, நிமிஷாவின் தயார், ஏமன் நாட்டிற்கு வந்துள்ளார். அவ்வாறு ஏமான் நாட்டிற்கு வந்தபோது, சிறையில் உள்ள தனது மகளையும் அவர் சந்தித்துள்ளார்.
அப்போது, இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து, கண்ணீர்விட்டு அழுதுள்ளனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் கசிந்து, பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. பிரேமா குமாரி இந்தியாவில் இருந்து ஏமன் நாட்டிற்கு செல்வதற்கான வசதியை, Save Nimisha Priya International Council என்ற அமைப்பு தான் செய்துக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.