Connect with us

Raj News Tamil

வீட்டு வேலைக்காரனை மணந்த முதலாளி பெண்…!

உலகம்

வீட்டு வேலைக்காரனை மணந்த முதலாளி பெண்…!

பாகிஸ்தானில் வசதி படைத்த பணக்கார பெண்ணொருவர் தனது வீட்டில் வேலை செய்யும் நபரை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அவர்களின் சுவாரசியமான காதல் கதை குறித்து தெரியவந்துள்ளது.

இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் நசியா. பணக்கார பெண்ணான இவருக்கு உறவினர்கள் என யாரும் இல்லாததால் பெரிய வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டு வேலைகளை செய்ய உதவியாளரை நியமிக்க முடிவு செய்ததார். இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.

அப்பொது சிலர் சுபியான் என்ற நபர் குறித்து நசியாவிடம் சொன்னார்கள். இதையடுத்து சுபியானை மாதம் ரூ.18000 சம்பளத்திற்கு வீட்டு வேலையாளாக பணியில் சேர்த்தார் நசியா.

சுபியானின் நல்ல நடத்தை, எளிமை, குணம் ஆகியவை எனக்கு அவர் மீது காதலை வரவழைத்தது. எனது பணம் மற்றும் அந்தஸ்தை கருத்தில் கொண்டு பல ஆண்கள் என்னை திருமணம் செய்ய அணுகினார்கள்.

ஆனால் சுபியானின் இயல்பு எனக்கு அவர் மீது ஈர்ப்பை கொடுத்தது. காதல் அந்தஸ்தையோ, நிறத்தையோ, செல்வத்தையோ, ஜாதியையோ பார்ப்பதில்லை.

நான் என் காதலை சுபியானிடம் வெளிப்படுத்திய போது அவரால் அதை நம்ப முடியவில்லை, பிறகு என்னை எற்றுக்கொண்டார்.என்னதான் அவர்களின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவைப் பற்றி பொதுமக்கள் பேசினாலும், ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்ற காதலர்களுக்கு அது ஒரு பொருட்டல்ல.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in உலகம்

To Top