மதராசப்பட்டினம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த படத்திற்கு பிறகு, தாண்டவம், ஐ, தெறி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அசைவ உணவுகளை தவிர்த்து, வீகன் வகையிலான உணவு பழக்கத்திற்கு மாறுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அசைவ உணவுகளை சாப்பிடுவதால் தான், காலநிலை மாற்றம் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட பைகளை பயன்படுத்திவிட்டு, காலநிலை மாற்றத்தை பற்றி பேசக்கூடாது என்று தெரிவித்தனர்.
விமானத்தில் பயணம் செய்து, உலகத்தை மாசுப்படுத்தும்போது, இதுபற்றி உங்களுக்கு தெரியவில்லையா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். வீகன் உணவு பழக்கத்தை பின்பற்றி வந்த பெண் ஒருவர், சமீபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.