மீண்டும் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் மத்திய அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்கள் மற்றும் அவருடைய தம்பி தொடர்புடைய இடங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க கோரி பலமுறை மேல் முறையீடு செய்தும் அமலாக்கத்துறை அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை பிடிக்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

செந்தில்பாலாஜியின் பெற்றோர் வசித்துவரும் ராமேஸ்வரபட்டியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News