பண மோசடி வழக்கு : நடிகை ரகுல் பிரீத்சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன்

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பெங்களூருவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி, நடிகை ரகுல் பிரீத்சிங் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் போதைப் பொருள் தொடர்புடைய பணமோசடி வழக்கில் நடிகை ரகுல் பிரீத்சிங் வரும் 19-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.