மதுரை விமான நிலையம் அருகே ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநில மாநாடு நடைபெறுகிறது. காவல்துறை அனுமதி தொடர்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்தை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் செல்லூர் கே.ராஜு கூறுகையில், “மாநாட்டிற்க்கான காவல்துறை அனுமதி தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பேசினோம், மாநாடு நடைபெறும் இடத்தினை காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளதாக எஸ்.பி கூறினார். மாநாட்டுக்கு விரைவில் காவல்துறை அனுமதி அளிக்கும் என எஸ்.பி கூறியுள்ளார்.
மாநாட்டினால் எந்தவொரு போக்குவரத்து நெரிசலும் வராத வண்ணம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுமார் 25 ஆயிரம் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதிமுக மாநாடு தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகளுடன் மதுரையில் 31 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.
பின்னர், அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதே அமலாக்கத்துறை சோதனை, திமுக அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபட்டு வருகின்றனர் என செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.