Connect with us

Raj News Tamil

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை

தமிழகம்

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமாக சிமெண்ட் நிறுவனம், நிலக்கரி நிறுவனம், சர்வதேச ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம், பள்ளிகள் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அண்ணா சாலை மற்றும் எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் இயங்கி வருகிறது. இந்த இரண்டு அலுவலகங்களிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு மற்றும் 2015ஆம் ஆண்டு செட்டி நாடு குரூப்ஸ் தொடர்பான இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு, பல கோடி மதிப்பிலான பணம் மற்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செட்டிநாடு குழும நிறுவனங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செட்டிநாடு குழுமத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.700 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமாக வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, கோவை மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மும்பையில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது,

தற்போது சென்னை எழும்பூரில் ருக்மணி சாலையில் உள்ள செட்டிநாடு குழுமத்தின் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top