திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். இது குறித்து மருத்துவர் லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான தனிப்படையினர் லஞ்சப்பணத்தோடு வந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.20 லட்சம் பணத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரியே லஞ்சம் வாங்கியதால் கைது செய்யபட்ட சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.