ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்: ரசிகர்கள் சோகம்!

ஸ்டூவர்ட் பிராட் என்றதும் 2007ஆம் ஆண்டில் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் 6 சிக்ஸர்கள் அடித்துதான் எல்லோருக்கும் நினைவிருக்கும். அந்த மோசமான நிகழ்விற்கு பின்னர் பிராட் தன்னை சிறந்த டெஸ்ட் பௌலராக நிலை நிறுத்தியுள்ளார்.

ஸ்டூவர்ட் பிராட் டெஸ்டில் 602 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இது வேகப்பந்து வீச்சாளர்களில் இரண்டாவது அதிகபட்ச டெஸ்ட் விக்கெட் ஆகும். முதலிடத்தில் ஆண்டர்சன் (690) இருக்கிறார்.

சர்வதேச டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வரிசையில் பிராட் 5வது இடத்தில் உள்ளார். முதலிடம் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள். வார்னே 708 விக்கெட்டுகளுடன் 2வது இடம்.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டம் முடிவடைந்த பின் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து ஸ்டூவர்ட் பிராட் பேசுகையில், நாளை அல்லது திங்கட் கிழமை தான் எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி நாளாக இருக்கப் போகிறது. என் வாழ்வின் இந்தப் பயணம் மிகச்சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. எப்போதும் இங்கிலாந்து அணியின் ஜெர்சியை அணிவதை பெருமையாக கருதியுள்ளேன். இந்த ஆஷஸ் தொடரை அதீத மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன்.

நேற்றைய இரவு 8.30 மணியளவில் ஓய்வு முடிவை எடுத்தேன். கடந்த இரு வாரங்களாக ஓய்வை பற்றி சிந்தித்து வந்தேன். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதும் பிடித்த ஒன்று. எனக்கும், எங்கள் அணிக்கும் அளிக்கப்படும் சவால்கள் பிடித்த ஒன்று. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சவால்களை ரசித்து எதிர்கொண்டுள்ளேன். அதேபோல் ஆஷஸ் தொடரில் தான் எனது கடைசி பேட்டிங் மற்றும் பவுலிங் அமைய வேண்டும் என்று விரும்பினேன் என்றார்.

RELATED ARTICLES

Recent News