Connect with us

Raj News Tamil

மோடியின் நடன வீடியோ.. கார்ட்டூன் மூலம் விமர்சிக்கப்படும் அரசியல் தலைவர்கள் ஓர் பார்வை..

இந்தியா

மோடியின் நடன வீடியோ.. கார்ட்டூன் மூலம் விமர்சிக்கப்படும் அரசியல் தலைவர்கள் ஓர் பார்வை..

நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் வேளையில், அரசியல் கட்சியினர் ஒருவரையொருவர், விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்கள் ஒரு படி மேலே செல்லும் சம்பவங்களும், அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரின் கார்ட்டூன் உருவங்கள், நடனம் ஆடுவது போன்ற வீடியோ, எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

தன்னுடைய வீடியோவை பார்த்துவிட்டு, தனது ரியாக்ஷனை கொடுத்த பிரதமர், “உங்களைப் போல் நானும் இந்த வீடியோவை ரசித்தேன். தேர்தல் சமயங்களில், இந்த மாதிரியான கிரியேட்டிவிட்டி மிகவும் சந்தோஷம் அளிக்கக்கூடியதாக உள்ளது” என்று கூறினார்.

ஆனால், மம்தா பானர்ஜியின் வீடியோவிற்கு, அரசு தரப்பில் இருந்து வேறு விதமான ரியாக்ஷன் கிடைத்துள்ளது.

அதாவது, “உன்னுடைய பெயர் மற்றும் வசிக்கும் இடம் பற்றி தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறாய். கேட்கப்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்றால், சட்டப்பூர்வ நடவடிக்கை, உன் மீது எடுக்கப்படும்” என்று கொல்கத்தா காவல்துறையின் எக்ஸ் பக்கத்தில், ரிப்ளை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இரண்டு வெவ்வேறு வகையிலான விதங்களில், ரியாக்ஷன் இந்த வீடியோவுக்கு கிடைத்துள்ளது.

முந்தைய காலங்களில், ஆர்.கே.லஷ்மன் போன்ற கார்ட்டூனிஸ்டுகள், தேர்தல் சமயங்களில், தங்களது படைப்புகள் மூலம், சிந்திக்கவும், சிரிக்கவும் வைப்பார்கள். இந்த நிலை தற்போது மாறி, மீம்ஸாக மாறியிருக்கிறது. இவ்வாறு கார்ட்டூன் மூலமாக விமர்சிக்கப்பட்ட தலைவர்கள் குறித்து பார்க்கலாம்.

சிவ சேனாவின் நிறுவனர் பால் தாக்கரே மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆகியோர், கார்ட்டூன் மூலமாக விமர்சிக்கப்பட்டனர்.

மேற்கு வங்கத்தில், இதுமாதிரியாக விமர்சிப்பது, 2012-ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பித்தது. கொல்கத்தாவின் பிரீமியர் ஜடாவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா, மம்தா பானர்ஜியின் கார்ட்டூனை உள்ளடக்கிய E-Mail-ஐ ஃபார்வேர்டு செய்திருந்தார். இதனால், அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

2019-ல், மம்தா பானர்ஜியின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை, பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததற்காக, பாஜகவின் இளைஞரணி உறுப்பினர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

2022-ல், முதலமைச்சர் தொடர்பான மீம்ஸை உருவாக்கியதாக கூறி, டெல்லி அருகில் உள்ள நொய்டா பகுதியை சேர்ந்த 29 வயது Youtuber-ஐ, காவல்துறையினர் கைது செய்தனர். இந்த மீம்ஸ், இழிவானதாக உள்ளது என்று காவல்துறையினர் கூறியிருந்தனர்.

More in இந்தியா

To Top