ஆன்லைன் தடை சட்டம் மசோதாவை அதிமுக சார்பாக வரவேற்பதாக ஓபிஎஸ் பேசினார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரு கட்சிக்கு ஒருவருக்கு தான் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவருக்கு எந்த தகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.
அதிமுக சார்பாக ஓபிஎஸ் க்கு பேச வாய்ப்பு அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்துக் கொண்டு ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.