“அந்த ரகசியத்தை சொல்ல வேண்டும்” – முதலமைச்சரை விமர்சித்த பழனிசாமி!

நீட் தேர்வு அச்சம் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில், சமீபத்தில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த இந்துமதி என்ற மாணவி, நீட் தேர்வு அச்சம் காரணமாக, தற்கொலை செய்துக் கொண்டார்.

இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களிடம் உள்ளது என்று திமுக கூறியிருந்தது. ஆனால், பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி, மாணவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கிறது இந்த திராவிட மாடல் அரசு. மாணவியின் மரணத்திற்கு அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், நீட் ரத்து செய்வதற்கான ரகசியத்தை, முதலமைச்சரும், அவரது மகனும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி, விமர்சித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News