“பிரச்சனைகளை திசை திருப்பும் திமுக” – EPS விமர்சனம்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, முதுலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உட்பட பல்வேறு, முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த கூட்டம், அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நிலவி வரும் சட்டஒழுங்கு சீர்கேட்டை மறைக்கவே, மறுசீரமைப்பு குறித்து முதலமைச்சர் பேசியதாக கூறினார்.

மேலும், நாடாளுமன்ற மறுசீரமைப்பு விவகாரம் குறித்து, நாடாளுமன்றத்தில் அவர் பேசியிருக்க வேண்டும் என்றும், பழனிசாமி கூறினார். தொடர்ந்து, தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு என்றும் அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News