ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய இபிஎஸ்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினமான இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

RELATED ARTICLES

Recent News