ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை அறிவித்திருந்தார். இதனால் கூட்டணி கட்சி தலைவர்களை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாலையை இவர்கள் சந்தித்து ஆதரவு கோரினர்.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர்.