ஈரோடு இடைத்தேர்தல் : ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை இருந்து வந்தார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு இரண்டாவது இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் மூன்றாவது இடத்திலும் இருந்து வந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,039 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 66397 வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் வெற்றி பெற்றுள்ளார்.