Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

7-வது சுற்றில் அதிரடி காட்டிய EVKS இளங்கோவன்..! கவனிக்க வைத்த நா.த.க!

தமிழகம்

7-வது சுற்றில் அதிரடி காட்டிய EVKS இளங்கோவன்..! கவனிக்க வைத்த நா.த.க!

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல், கடந்த 27-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக 15 சுற்றுகள் கொண்ட இந்த வாக்கு எண்ணிக்கையில், இதுவரை 7 சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளது.

இதில், 7 வது சுற்றில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 53,747 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக, அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 20,201 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறார். நாம் தமிழர் கட்சியின் மேனகா, 3,939 வாக்குகள் பெற்று 3-வது இடத்தில் இருந்து வருகிறார்.

தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 528 வாக்குகள் மட்டும் பெற்று கடைசி இடத்தில் உள்ளார். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருந்து வருகிறார்.

இதுமட்டுமின்றி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மேனகா, கிட்டதட்ட 4 ஆயிரம் வாக்குகள் பெற்று, பலரையும் கவனிக்க வைத்துள்ளார். இது, நாம் தமிழர் கட்சியின் சீரான வளர்ச்சியை வெளிக்காட்டுவதாக உள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top