ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல், கடந்த 27-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, தற்போது நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை பெற்றிருந்தார். அதற்கு அடுத்தடுத்த இடங்களில், அதிமுக கட்சியின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேகாவும், தேமுதிக கட்சியின் வேட்பாளர் ஆனந்த் ஆகியோர் முறையே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், 2-வது சுற்றின் நிலவரப்படி, யார் முன்னிலையில் உள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த முறை, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 17,417 வாக்குகளும், கே.எஸ்.தென்னரசு 5,598 வாக்குகளும், மேனகா 1,479 வாக்குகளும், ஆனந்த் 206 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்மூலம் 2-வது சுற்றிலும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான் முன்னிலையில் உள்ளார்.