ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல், கடந்த 27-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. 15 சுற்றுகள் கொண்ட இந்த வாக்கு எண்ணிக்கையில், இதுவரை 2 சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த இரண்டு சுற்றுகளிலும், திமுக கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான் முன்னிலையில் உள்ளார். 3-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடத்திலேயே, உணவு இடைவேளைக்காக வாக்கு எணணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கையை, நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்காக, செய்தியாளர்கள் சிலர் உள்ளே நுழைந்தனர்.
ஆனால், அவர்களை உள்ளே விடாமல், காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, அராஜகத்துடன் செயல்பட்டனர். இது அங்கிருந்த செய்தியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக, வாக்கு எண்ணும் மையத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதற்காக செய்தியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்ற கேள்வியும், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.