டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும், இன்று காலை 7 மணி முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், பொதுமக்கள் வாக்களிப்பதற்காக, தேர்தல் ஆணையத்தின் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதம் என்னவென்ற தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, 1 மணி நேர நிலவரப்படி, டெல்லியில் 33.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோல், ஈரோடு கிழக்கு தொகுதியிலும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், 1 மணி நேர நிலவரப்படி பதிவான வாக்குகள் நிலவரம் தெரியவந்துள்ளது.
அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில், 42.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாம். முன்னதாக, 11 மணி நேர நிலவரப்படி, டெல்லியில் 19.95 சதவீத வாக்குகளும், ஈரோடு கிழக்கு தொகுதியில் 26.03 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.