ஈரோடு அருகே ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – போலீஸ் விசாரணை

ஈரோடு அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அர்ஜுனன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அதே பகுதியில் மற்றொருவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் தொழில் ரீதியாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அர்ஜுனன் வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் ஓட்டலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று அதிகாலை காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் அர்ஜுனன் ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளார். இதனால் ஹோட்டல் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கடையின் முன் பகுதியில் இருந்த 2 பிரிட்ஜ்கள், மேற்கூரை எரிந்து சேதமடைந்தது.

கடையின் முன்பு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News