கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா., காலமானார். இவரது மறைவுக்கு பிறகு, அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தலுக்கான தேதி வெளியிடப்பட்டது.
இந்த தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக கட்சியின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நா.த.க சார்பில் மேனகா நவநீதன் உட்பட 77 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தல், கடந்த 27-ஆம் தேதி அன்று நடைபெற்ற நிலையில், அந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இதில், திமுக கூட்டணி வெல்லுமா? அல்லது அதிமுக கூட்டணி வெல்லுமா? அல்லது வேறு ஏதேனும் கட்சியின் வேட்பாளர்கள் வெல்வார்களா? என்ற எதிர்பார்ப்பில் அனைத்து தரப்பினரும் இருந்து வருகின்றனர்.
ஆனால், ஆளுங்கட்சியான திமுகவின் கூட்டணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.. உண்மையான வெற்றி வேட்பாளர் யார் என்பதை..