5 வருட சம்பளத்தை போனஸாக வழங்கிய நிறுவனம்! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்!

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பல்வேறு ஊழியர்களின் கனவாக இருப்பது, போனஸ் வாங்குவது தான். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரும்போதெல்லாம், இந்த வருடமாவது போனஸ் வருமா? என்று அனைத்து ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்து, கடைசியில் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவார்கள்.

அப்படியே சில நிறுவனங்கள் போனஸ் வழங்கினாலும், அரை மாத ஊதியத்தையோ, ஒரு மாத ஊதியத்தையோ மட்டுமே போனஸாக வழங்குவார்கள். ஆனால், தற்போது தனியார் நிறுவனம் ஒன்று, 5 வருட சம்பளத்தை போனஸாக வழங்கி, ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, தைவான் நாட்டை சேர்ந்த எவர் க்ரீன் என்ற நிறுவனம், கப்பலில் சரக்குகளை எடுத்து செல்லும் தொழில் செய்து வருகிறது. இந்த நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில், கப்பல் போக்குவரத்தின் பயன்பாடு அதிகமாக இருந்ததால், இந்நிறுவனத்தின் வளர்ச்சி அசுரத்தனமாக உயர்ந்துள்ளது.

இதன்காரணமாக, அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு, 5 வருட சம்பளத்தை போனஸாக வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் ஊழியர்களின் திறமை மற்றும் செயல்பாட்டை முன்வைத்து, இந்த போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News