நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காலை 7 மணியில் இருந்து வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அஜித், ரஜினி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள், காலையிலேயே வாக்கு செலுத்தியிருந்தனர்.
ரஷ்யாவில் தி கோட் படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால், நண்பகல் நேரத்தில், விஜய் தன்னுடைய வாக்கை செலுத்தினார். வாக்கு செலுத்திய பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வாக்கு செலுத்திவிட்டு, அங்கிருந்து வெளியேறிய அவர், தற்போது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இவரது பதிவு வெளியான அரை மணி நேரத்திலேயே, 300-க்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களையும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும், 81 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையும் பெற்றுள்ளது. மேலும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இந்த பதிவை ரீ ட்வீட் செய்துள்ளனர்.