ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்.
மார்ச் 15ஆம் தேதி இரவு நுரையீரல் தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. லேசான கொரோனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.