ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக கடந்த 15-ம் தேதியன்று சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நெஞ்சுவலிக்கான சிகிச்சைகள் நடைபெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறிய நிலையில் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.