மத்திய பிரதேச மாநிலம் பெதுல் என்ற இடத்தில் வாக்குச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களை அழைத்து வந்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகின. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்பேருந்தில் பயணித்த 36 தேர்தல் அதிகாரிகளும் காயமின்றி உயிர் தப்பினர். சிலர் பேருந்தின் கண்ணாடியை உடைத்து உயிர் தப்பினர்.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.