ஷாருக்கானின் ”உயிரே” படத்தில் இடம்பெற்ற தக்க தைய்ய பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் நடிகை மலைகா அரோரா. பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர், கடந்த 1998-ஆம் ஆண்டு நடிகர் அர்பாஸ் கானை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக 2017-இல் விவாகரத்து செய்தனர். இதையடுத்து நடிகை மலைகா தயாரிப்பாளர் போனி கபூரின் மகனுடன் லிவிங் டூவில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது 20 வயது மகனை மேற்படிப்பிற்காக, அமெரிக்கா செல்வதற்கு விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது முன்னால் கணவர் அர்பாஸ் கானை பார்த்ததும், தனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் பரஸ்பரம் கட்டி அனைத்துக்கொண்டனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் இதல்லவா மெச்சூரிட்டி என கமெண்ட் செய்து வருகின்றனர்.