Connect with us

Raj News Tamil

கட்சியில் இருந்து விலகிய முக்கிய நபர்…அதிர்ச்சியில் காங்கிரஸ்..!!

அரசியல்

கட்சியில் இருந்து விலகிய முக்கிய நபர்…அதிர்ச்சியில் காங்கிரஸ்..!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், போகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகினார்.

இதனைதொடர்ந்து தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் ராகுல் நர்வேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார்.

More in அரசியல்

To Top