கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உளவுத்துறையே முழுக்காரணம் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்..!

சென்னை நந்தனத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 115 – வது ஜெயந்தி விழாவையொட்டி, அவரது சிலைக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஒட்டுமொத்த காரணம் உளவுத்துறை எனக் குற்றம்சாட்டினார். மேலும் திமுக அரசாங்கம் அமையும் போதெல்லாம் வெடிகுண்டு, வன்முறை தீவிரவாத கலாச்சாரம் தலைவிரித்தாடும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 6 – இடங்களில் குண்டு வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது என்றார். மேலும் இச்சம்பவம் துரதஷ்டத்தில்,ஒரு அதிர்ஷ்டமாக போய்விட்டது எனக் கூறிய அவர், வருமுன் காப்போம் என்ற அரசாங்கமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.