உத்தரகாண்டு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமானவர் ஹரிஷ் ராவத். இவர், ஹல்டுவாணி பகுதியில் இருந்து, உத்தம் சிங் நகரின் காஷிப்பூருக்கு காரில் சென்றுள்ளார்.
அப்போது, பாஜ்பூர் அருகே வந்தபோது, தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது, அவர் உடல்நிலை சீராக உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த கார் விபத்து குறித்து அறிந்த நெருக்கமானவர்கள், ஹரிஷ் ராவத்தை தொடர்பு கொண்டு, தொடர்ந்து நலம் விசாரித்து வந்தனர். இதன்காரணமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஹல்டுவானியில் இருந்து காஷிபூருக்கு பயனம் செய்துக் கொண்டிருந்தபோது, பாஜ்பூர் அருகே கார் வந்தபோது, தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், லேசான காயம் ஏற்பட்டது.
எனவே, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டேன் மற்றும் நான் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். பிறகு, மருத்துவமனையில் இருந்து நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.
இந்த விபத்து குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நான் நலமாக தான் உள்ளேன். மேலும், என்னுடைய உதவியாளரும் நலமாக தான் உள்ளார்” என்று கூறியுள்ளார்.