நீதிமன்றத்தில் பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு!

சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரண்டைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதில், பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சொத்துகுவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News