தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலா துறை சார்பாக நடைபெற்ற ஆடி பெருக்கு விழாவில் பல்துறை விளக்க கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் பால், தேயிலை, தேன், நெய், உணவு பொருள்களில் உள்ள கலப்படத்தை கண்டறியவும், மேலும் தடை செய்யப்பட்ட பொருள்கள் குறித்தும் விழிப்புணர்வு கண்காட்சி, செயல் விளக்கம் போன்றவை உணவு பாதுகாப்பு துறை சார்பாக அளிக்கப்பட்டது.
மேலும் பொருளின் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி ,காலாவதி தேதி சைவ ,அசைவ குறியீடு எடை ,விலை, ஊட்டச்சத்து தகவல்கள், அலர்ஜி சேர்க்கை இதனுடன் உணவு பாதுகாப்பு லோகோவுடன் உரிம எண் கண்டிப்பாக இருக்க வேண்டும் எனவும் நெகிழி பொருள்கள் தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இதைதொடர்ந்து விவசாய பொருட்கள் ,வேளாண்மை கருவிகள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கினார்கள்.