ஹௌரா – மும்பை விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜார்க்கண்டில் (ஜூலை 30) இன்று அதிகாலை மும்பை நோக்கி சென்ற ஹௌரா மும்பை விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து குறித்து தென்கிழக்கு ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இன்று அதிகாலை 3.45 மணியளவில் விபத்து நடந்துள்ளது. மும்பை – ஹவுரா ரயில் (ரயில் எண் 12810) சக்ரதர்பூர் அருகே தடம்புரண்டது. இதில் மும்பை – ஹவுரா மெயிலின் 10 முதல் 12 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. 2 பேர் இறந்தனர். 20 பயணிகள் காயமடைந்துள்ளனர். சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுவர்களுக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்படுவர்களுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்றார்.