அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்தது. விசாரணை முடிந்த நிலையில் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவரின் நீதிமன்ற காவல் வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 28-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறைதுறைக்கு நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News