பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவர். பாலியல் வீடியோ சர்ச்சை தொடர்பாக கடந்த 31ம் தேதி அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த போது பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் (வரும் 8ம் தேதி வரை) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News