Connect with us

Raj News Tamil

துபாயில் 20 கார்களின் பேரணி.. ஆடம்பரத்தை காட்டிய ஆனந்த் அம்பானி.. வீடியோ வைரல்..

இந்தியா

துபாயில் 20 கார்களின் பேரணி.. ஆடம்பரத்தை காட்டிய ஆனந்த் அம்பானி.. வீடியோ வைரல்..

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமானவர் முகேஷ் அம்பானி. பிரம்மாண்டங்களுக்கு பெயர் போன இவர், தங்களது பிள்ளைகளின் திருமணத்தை, உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் நடத்தியிருந்தார்.

தற்போது, தனது கடைசி மகனான ஆனந்த் அம்பானியின், திருமணத்திற்கு முந்தைய நிகழ்வையே, பெரிய திருவிழா போல நடத்தி, பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். இந்நிலையில், ஆனந்த் அம்பானி, துபாய்-க்கு சென்றிருந்தார்.

அப்போது, அங்கிருந்த மால் ஒன்றிற்கு ஷாப்பிங் சென்றபோது, 20 உயர் ரக சொகுசு வாகனங்களுடன், பெரிய பேரணியே நடத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை, ஹிஸ்டாரிக் விட்ஸ் என்ற பெயரில் செயல்படும், எக்ஸ் தள கணக்கு வெளியிட்டுள்ளது.

வீடியோவை பார்த்த ஒருசில நெட்டிசன்கள், இது முகேஷ் அம்பானிக்கு சொந்தமான கார்கள் தான் என்று கூறி வருகின்றனர். ஒருசிலர், செக்யுரிட்டிகளுடன், அந்த கார்களையும், துபாயில் வாடகைக்கு எடுத்திருக்கலாம் என்று யூகித்து வருகின்றனர்.

இதேபோல், 2022-ஆம் ஆண்டு அன்று, 80 மில்லியன் டாலர் மதிப்பில், தனி வீடு ஒன்றை, துபாயில் வாங்கியிருந்தார். இந்த வீடு, வடக்கு பாம் ஜெர்மையா பகுதியில், அமைந்துள்ளது. இந்த சொகுசு வீட்டில், 10 படுக்கை அறைகளும், ஒரு ஸ்பாவும், இரண்டு நீச்சல் குளங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More in இந்தியா

To Top