மனஉளைச்சல்.. மனைவி குழந்தைகளை சுத்தியலால் அடித்துக் கொன்ற மருத்துவர்..

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூர் ரே பரேலியை சேர்ந்தவர் அருண்குமார். கண் மருத்துவராக பணியாற்றி வந்த இவருக்கு, அர்ச்சனா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.

கடந்த சில மாதங்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த இவர், கடந்த இரண்டு நாட்களாக, மருத்துவமனைக்கு செல்லாமலே இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள், வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால், உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது, அர்ச்சனாவும், இரண்டு குழந்தைகளும், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.

மேலும், அருண் குமாரும், தனது படுக்கை அறையில், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டு, சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், 4 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். அதில், மனஉளைச்சல் காரணமாக, தனது மனைவியையும், குழந்தைகளையும், அருண்குமார் கொலை செய்திருப்பதும், இதனால் ஏற்பட்ட விரக்தியால், அவர் தற்கொலை செய்துக் கொண்டதும், தெரியவந்தது.

RELATED ARTICLES

Recent News